Perambalur: Taken without proper documents, Rs. 444200 election flying raids!
பெரம்பலூர் மாவட்டத்தில், 4 இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் , ரூ. 444200-யை பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூரை அடுத்துள்ள எசனை காட்டு மாரியம்மன் கோவில் அருகே வாகன தணிக்கையின் போது பைக்கில் வந்த பெரம்பலூர் சதாசிவம் நகரை சேர்ந்த கந்தசாமி மகன் தீபன் (31) என்பவரை சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 85,500ம்,
மருதையான் கோவில் அருகில் நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த காடூரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் முத்துவேல் (53) உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற தொகை ரூபாய்.1,40,000 த்தையும்,
பாண்டாகப்பாடி – மாவிலங்கை பிரிவு சாலையில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த சிவக்குமார் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற தொகை ரூபாய்.1,19,200யும்,
அன்னமங்கலம் கைகாட்டி அருகே வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவரால் வேப்பந்தட்டை முதல் பெரம்பலூர் வரை செல்லவிருந்த காரில் ரூ .1,00,000/- உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லபட்டதை தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் கைப்பற்றினர்.
4 இடங்களில் தேர்தல் குழுவினர் பறிமுதல் செய்த ரூ. 444200-யை, பெரம்பலூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், சார் ஆட்சியருமான கோகுல் இடம் ஒப்படைக்கப்பட்டது.