Perambalur teacher couple gave Rs 1.20 lakh pension to Chennai storm rains!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், தங்களின் ஒருமாத ஓய்வூதிய தொகையான தலா ரூ.60,000 வீதம், ரூ.1.20 லட்சத்தை காசோலையாக கலெக்டர் கற்பகத்திடம், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதியினர் சிவகணேசன் – பருவதம்மாள் ஆகியோர் வழங்கினர்.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் தனியார் அமைப்புகள், தனியார் கல்லூரிகள், தொழிலதிபர்கள், செய்தியாளர்கள் என பல்வேறு அமைப்பினரும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், அன்னை பருவதம்மாள் மெட்ரிக்குலேசன் பள்ளியின் நிறுவனர்களும், சிவகணேசன் மற்றும் பருவதம்மாள் தங்களது ஒருமாத ஓய்வூதியமான தலா ரூ.60 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டரிடம் வழங்கினர்.

அதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரியைச் சேர்ந்த தேவசகாயம் மகன்கள் தர்ஷன், யஷ்வந்த் மாணவர்கள் இரண்டு வருடங்களுக்கு மேல் உண்டியலில் சேமித்து வைத்த உண்டியல் பணத்தை (ரூ.2,402) உண்டியலோடு கலெக்டரிடம் வழங்கினர்.

இளந்தளிர்களும் முதியோர்களும் வரை மனிதநேயத்துடன் உதவிசெய்ய முன் வந்ததற்காக கலெக்டர் கற்பகம், எம்.எல்.ஏ பிரகாரகன் ஆகியோர் மனதார பாராட்டினர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!