Perambalur; Teacher Deepa murder case: After police custody, Venkatesan was produced in court and jailed.

File Copy

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே முருக்கன்குடி வனப்பகுதியில் கடந்த 2023 நவம்பர் மாதம் 15ம் தேதி நிகழ்ந்த வி.களத்தூர் அரசுப்பள்ளி ஆசிரியை தீபா கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று மாதங்களுக்கு பின்னர் கடந்த 10ம் தேதி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையிலிருந்த சக ஆசிரியரான வெங்கடேசனை, விசாரிக்க வேண்டுமென நான்கு நாட்கள் போலீஸ் கஷ்டடி கேட்டு பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதி மன்றத்தில் வி.களத்தூர் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

போலீசாரின் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், கடந்த 15ம் தேதி ஆசிரியர் வெங்கடேசனுக்கு 3 நாட்கள் போலீஸ் கஷ்டடி வழங்கியது. இதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்த வெங்கடேசனை வி.களத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்த வெங்கடேசன், தீபாவை கொலை செய்ததற்காக கண்ணீர் மல்க போலீசாரிடம் அழுதுள்ளான்.

மேலும் தீபாவை சுத்தியலால் அடித்து கொடூரமாக கொலை செய்து கார் டிக்கியில் வைத்து, புதுக்கோட்டை அருகே காரைக்குடி செல்லும் சாலையில் உள்ள பூசத்துறை வெள்ளாற்று படுகையில், சடலத்தை தூக்கி வீசி பெட்ரோல் ஊற்றி 15 மணி நேரம் காத்திருந்து எரித்ததாகவும், அதனைத் தொடர்ந்து மதுரை, தேனி, கோவை சென்ற தன்னை பெரம்பலூர் மாவட்ட போலீசார் பின் தொடர்ந்து வருவதை அறிந்து காரை கோவை, உக்கடம் பகுதியில் நிறுத்தி விட்டு, பேருந்தில் ஏறி சென்னை சென்று சாலையோரம் வசிக்கும் பொது மக்கள் உள்ளிட்ட யாசகர்களுடன் சேர்ந்து கோவில்களில் மதிய வேளையில் அன்னதானம் சாப்பிட்டதாகவும் அவர்களுடன் படுத்து உறங்கியதாகவும். சில நேரங்களில் கூலி வேலைக்கு சென்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து, இரவு மற்றும் காலை உணவு எடுத்துக்கொண்டதாகவும், தன்னிடம் இருந்த 95 ஆயிரம் ரூபாய் பணத்தை நாள்தோறும் அழகிகள் மற்றும் திருநங்கைகளுடன் உல்லாசமாக இருந்து செலவு செய்ததாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெங்கடேசன் தெரிவித்துள்ளான்

இதனையடுத்து, வெங்கடேசனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொலை நிகழ்ந்த இடம் சடலத்தை எரித்த இடங்களுக்கு அழைத்துச் சென்று, மண்டை ஓடு எலும்புக்கூடு உள்ளிட்டவகளை சேகரித்து, தடைய அறிவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்த போலீசார் நான்கு நாட்கள் போலீஸ் கஸ்டடி முடிந்து இன்று, பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிழ நீதிமன்ற நீதிபதி சங்கீதா சேகர் முன் ஆஜர் படுத்தினர். இதைத் தொடர்ந்து நீதிமன்ற காவலில் வெங்கடேசனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!