Perambalur: Temple and house looted in broad daylight; Police investigation!
பெரம்பலூர் நகரில் பட்டபகலில் கோவில் உண்டியல் மற்றும் பூட்டி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பெரம்பலூர் போலீஸ்சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம், நியூ காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில் இருந்த உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்த பணம் திருடப்பட்டு இருப்பதை அறிந்த கோவில் நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பர்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதில் பனியன் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்த சுமார் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சைக்கிளில் கோவிலை நோட்ட மிட்டவாறு சென்று பின்னர் கோவிலின் முன்பு சைக்கிளை நிறுத்தி விட்டு, உள்ளே சென்றவர் சிசிடிவியை பார்த்ததும் அங்கிருந்த ஒரு வேஷ்டியை பின்புறமாக உடல் முழுவதும் தலையை சுற்றி போர்த்தியபடி ஒய்யாரமாக கோவிலில் மூலஸ்தானம் உள்ளிட்ட பகுதிகளை அலசி ஆராய்ந்து பார்த்து விட்டு, பின்னர் சிசிடிவி கேமராவில் பதிவாகாத படி உண்டியலை நகர்த்திச் சென்று பூட்டை உடைத்து பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்து சைக்கிளில் அங்கிருந்து இயல்பாக புறப்பட்டுச் சென்றது தெரிய வந்தது.
விளம்பரம்:
ரூ. 4 மட்டும் செலுத்துங்கள்… 141 நாட்களுக்கு வரன் பாருங்கள்… https://dsmatrimony.net/
இதேபோல் துறைமங்கலம் மூன்று ரோட்டில் இருந்து நான்கு ரோடு செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கின் பின்புறம் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான ராஜீவ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகளையும், 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்ததுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரண்டு திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தங்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிவிட்டதாக பெரும் அச்சமடைந்துள்ளனர்.
விளம்பரம்:
ரூ. 4 மட்டும் செலுத்துங்கள்… 141 நாட்களுக்கு வரன் பாருங்கள்… https://dsmatrimony.net/