Perambalur Thambu Restaurants’ 4 Road New Branch Opening Ceremony is happening tomorrow!

பெரம்பலூரில் கடந்த சுமார் 23 ஆண்டுகளாக தம்பு காபி பார் `நிறுவனம் இயங்கி வருகிறது.

பெரம்பலூர் நகரில் காமராஜர் வளைவு , சங்கு சமீபம் ஐஓபி அருகிலும், வெங்கடேசபுரம் எஸ் பி ஐ வங்கி அருகிலும், நான்கு ரோடு சந்திப்பிலும், புதிய பேருந்து நிலையம் எதிரிலும் 5 ஐந்து கிளைகளுடன் வாடிக்கையாளர்கள் சிறப்பான ஆதரவு பெற்று இயங்கி வரும், தம்பு காபி பாரில், டீ, காபி, ஸ்நாக்ஸ் மற்றும் டீ வடை போண்டா, சம்சா போன்றவை தரமான எண்ணெய்யை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

சுடசுட ருசியும், மணத்துடன் வழங்குவதால் தம்பு காபி பார் பட்சணங்களுக்கு வாடிக்கையாளர்களிடையே தனி வரவேற்பு உண்டு. ஆர்டரின் பெயரில் அனைத்து விஷேசங்களுக்கும் உணவு வகைகள் செய்தும் கொடுத்தும் வருகின்றனர்.

கோபாலன் பால் நிலையம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பண்ணை பாலையும் வினியோகம் செய்து வருகின்றனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே ஒரு கிளை இயங்கி வருகிறது. தற்போதும் மேலும், புதிதாக பெரம்பலூர் நான்கு ரோடு சந்திப்பில், அரியலூர் செல்லும் வழியில் தம்பு ரெஸ்டாரண்ட் உயர்தர சைவ உணவகம் புதிய கிளையின் திறப்பு விழா நாளை ஞாயிற்றுக் கிழமை காலை (பிப்.5) 7.31 மணி அளவில் நடக்கிறது. இது தம்பு ரெஸ்டாரண்ட்சின் இரண்டாவது உணவகம் ஆகும்.

கார் பார்க்கிங் பைக் பார்க்கிங் வசதிகளுடன் உள்ளது. உயர்தர சைவ உணவுகள் தயாரிக்கப்பட்டு காலை, மதியம், மாலை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. நாளை நடக்கும் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை தம்பு ரெஸ்டாரண்ட்ஸ்-சின் உரிமையாளர் ஆர். பாலாஜி, சுமதி பாலாஜி, திவ்யலட்சுமி, கோகுல் மற்றும் கடை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

நாளை நடக்கும் திறப்பு விழாவில் வாடிக்கையாளர்கள் திரளாக கலந்து கொண்டு வாழ்த்த வேண்டும், என்றும், அழைப்பிதழ் கிடைக்கப் பெறாதவர்கள் இதையே அழைப்பிதழாக ஏற்று வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டும் என தம்பு ரெஸ்டாரண்ட்ஸ் உரிமையாளர் ஆர்.பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார்.

விளம்பரம்:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!