Perambalur: The body of the organ donor was buried with state honors!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவகுடியை சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் கிருஷ்ணன் (தூய்மை பணியாளர், வயது 58 ) என்பவர், கடந்த 19-4-2024 அன்று மாலை சுமார் 6 மணி அளவில் கீழே விழுந்துவிட்டார். இவரை உடனடியாக மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்பு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் இவரை பரிசோதனை செய்ததில் இவர் மூளை சாவு அடைந்து விட்டார் என தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அவரது மனைவி திருமதி தனலட்சுமி ( 52) என்பவர் கணவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்துள்ளார்.

4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். உடல் உறுப்புகளை தானம் செய்யும் நபர்களை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்திட வேண்டும் என்ற அரசின் உத்தரவின்படி, இன்று (22.04.2024) விசுவகுடியில் கிருஷ்ணனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சார் ஆட்சியர் சு.கோகுல் கலந்து கொண்டு கிருஷ்ணனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!