Perambalur: The bus drivers who were talking without giving way: The VCK Party person who Asked, attacked each other in the middle of the road, causing a stir: Police investigation!

பெரம்பலூர் அருகே மற்றவர்களுக்கு வழிவிடாமல் பேசிக் கொண்டிருந்த அரசு பஸ் டிரைவர்களை தட்டிக் கேட்ட சம்பவத்தில் பயணிகள் முன்பு ஒருவரை ஒருவர் நடுரோட்டிலேயே தாக்கி கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பஸ் இயக்கப்படாமல் நின்றதால் பொதுமக்ககள் சிரமம் அடைந்தனர்.

இன்று பெரம்பலூரில் இருந்து பூலாம்பாடிக்கு அரசுக்கு சொந்த டவுன் பஸ் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அது அரும்பாவூர் இளங்கோ நகர் பஸ் ஸ்டாப்பில் பயணிகளை இறக்கி விட்டு கொண்டு இருந்ததாகவும், அதே சமயத்தில் அ.மேட்டூரில் இருந்து பெரம்பலூர் வந்த மற்றொரு டவுன் பஸ்சும் அங்கு வந்தாக கூறப்படுகிறது. இரு பஸ்களின் டிரைவர்களும் பஸ் டிரைவர் சீட்டில் இருந்து கொண்டே நலம் விசாரித்துக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது அரும்பாவூரை சேர்ந்த விசிக பிரமுகர் ராசித்அலி (50) என்பவர் அவரது மனைவியை பெரம்பலூருக்கு பஸ் ஏற்றிவிட சென்றுள்ளார்.

டவுன் பஸ்கள் இரண்டும், சாலையை அடைத்தப்படியும், பிற வாகனங்கள் செல்லமுடியாத வகையில் நின்றுள்ளதை ராசித் அலி இரு பஸ் டிரைவர்களிடம் தட்டி கேட்டுள்ளார். இதில், பஸ் டிரைவர்களுக்கும், ராசித் அலிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பூலாம்பாடி டவுன் பஸ் கண்டக்டரான சேலம், மாவட்டம், கெங்கவல்லி தாலுகா கவர்பனையை சேர்ந்த ராஜேந்திரனுக்கும், ராசித் அலிக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் பயணிகள் முன்னிலையில் தாக்கி கொண்டனர். இதில் கண்டக்டர் ராஜேந்திரன் ராசித் அலியின் பைக் சாவியை பிடுங்க முயன்றுள்ளார். இதில் மீண்டும் ஒருவரை ஒருவர் நடுரோட்டிலேயே தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ராசித் அலி ராஜேந்திரனின் கையை கடித்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அரும்பாவூர் போலீசார் அரசு பஸ் டிரைவர் – கண்டக்டர்கள் மற்றும் விசிக பிரமுகர் ராசித் அலியிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், பூலாம்பாடிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் அரும்பாவூர் போலீஸ் ஸ்டேசனுக்கு சென்றதால், அந்த பஸ்சில் வழக்கமாக பயணிக்கும் பயணிகள் அவதி அடைந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!