Perambalur: The decision in the VCK meeting to remove the encroachment of private educational institutions and private companies on the government land and demand recovery!

பொம்பலுர் மேற்கு மாவட்ட விசிக நிர்வாகக்குழு கூட்டம், துறைமங்கலத்தல் மாவட்ட தலைமை அலுவலகத்தில்,
மாவட்டச்செயலாளர் ம.க.ச. இரத்தினவேல் தலைமையில் நடந்தது.

நகரச் செயலாளர் தங்க. சண்முக சுந்தரம் வரவேற்றார். மாவட்டத் துணைச் செயலாளர் ந. கிருஷ்ணகுமார், மண்டலதுணைச் செயலாளர் பெ. லெனின், முன்னிலை வகித்தனர். மாநிலசெயலாளர் வீர. செங்கோலன், பெரம்பலூர் நாடாளுமன்ற துணை செயலாளர் சா. மன்னர் மன்னன், மு.மா.க மாநில து.செ க.அ.தமிழ்குமரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கூட்டத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம், மற்றும் விழுப்புரம், நாடாளுமன்ற தொகுதிகளில் எழுச்சி தமிழர்
தொல்.திருமாவளவனையும், பொதுச் செயலாளர் துரை.இரவிக்குமாரையுயும் வெற்றி பெற செய்த 2 தொகுதி வாக்காளர்களுக்கும், ஐ.என்.டி.ஐ.ஏ., கூட்டணி கட்சிகளின் சார்பாக உழைத்திட்ட அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் பெரம்பலூர் மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வது,

தலைவர் தொல்.திருமாவளவன், எம்.பியாக பதவி ஏற்கும் நாளன்று, பெரம்பலூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும், கட்சி கொடியை ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடுவது என்றும்,

தலைவரின் 35 ஆண்டுகால அயராத உழைப்பால் 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரமும் கட்சியின் நிரந்தர சின்னமாக பானை சின்னத்தையும் பெற்றுக் கொடுத்த விளிம்பு நிலை, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையான மக்களின் நிரந்தர பாதுகாவலர் தலைவர் தொல்திருமாவளவனுக்கு, நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வது,

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு செய்துள்ள ஏழை மாணவர்களுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்வதை வெளிப்படையாக அறிக்கை பெற்று அதனை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்றும்,

பெரம்பலூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், வேப்பந்தட்டை, பெரம்பலூர் நகரத்திற்குட்பட்ட, தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள பஞ்சமி தரிசு நிலங்கள், நீர்வழி புறம்போக்கு, ஓடை புறம்போக்கு, குட்டை புறம்போக்கு, நிலங்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நேரடி கவனத்தின் கீழ் மீட்டு கையகப்படுத்த வேண்டும் என்றும்,

இது தொடர்பாக கட்சி சார்பில். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்து முறையிடுவது எனவும் விரைவில் மேற்படி நிலங்களை மீட்க வலியுறுத்தி மாபெரும் போராட்டம் நடத்துவது என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஒன்றியசெயலாளர்கள் மனோகரன், சி.பாஸ்கர் பிச்சைப்பிள்ளை, எ. வெற்றியழகன் மா. இடிமுழக்கம், உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர் அணிநிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர பொருளாளர் பெ. இளையராஜா நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!