பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (65)விவசாயி. இவர் ஊருக்கு அருகில் 5 ஏக்கர் நில பரப்பில் கரும்பு சாகபடி செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை அவரது வயலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அருகிலிருந்தவர்கள் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அனைத்தனர். இருப்பினும் 4 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டிருந்த கரும்பு தீயில் கருகி சேதமடைந்தது. இது தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்துகின்றனர்.