Perambalur: The DMK’s union secretary’s pornographic speech; Public police complain!
பெரம்பலூர் அருகே, இரு சமூக மக்களிடையே பகையுணர்வை ஏற்படுத்தி சாதி கலவரத்தை ஏற்படுத்த முயற்ச்சிக்கும் திமுக ஒன்றிய செயலாளர் மதியழகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் எஸ்.பி இடம் கிராம பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம். குன்னம் வட்டம். பெ .நல்லூர் (எ) பள்ளக்காடு கிராமத்தை பொதுமக்கள் சார்பில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலம் வந்து, எஸ்.பி ஷ்யமளாதேவியடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில் பெ.நல்லூர் (எ) பள்ளக்காடு கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். 200 குடும்பங்களில் ஒரு 10 குடும்பம் மட்டும் பட்டியல் இனத்தவர்கள் மற்றவர்கள் அனைவரும் வன்னியர்களே இதுவரை எங்கள் கிராமத்தில் சாதி மோதல்களோ, சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளோ இன்றி அமைதியான முறையில் வசித்து வருகிறோம்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மதியழகன் பொது இடங்களில் பேசும் போது, இரு சமூக மக்களிடையே இன உணர்வை தூண்டும் வகையிலும் இன கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டும் இழிவாக பேசியும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அதில், மதியழகன் என்பவர் வேண்டுமென்றே எங்கள் கிராமத்தைபற்றியும், கிராமத்தில் வசிக்கும் பொது மக்களை பற்றியும், உண்மைக்கு மாறான பொய்செய்திகளை சொல்லி நடக்காததை நடந்தது போலவும், சமுகத்தில் எங்கள் கிராமத்திற்கும் பிற சமூகத்தினருக்கு எதிராக பேசியுள்ள ஆடியோவால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டு சாதி மோதல்களை உருவாக்கி எங்களுக்கும் எங்கள் சமூக மக்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது.
திமுக ஒன்றிய செயலாளர் மதியழகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறும் பட்சத்தில், பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.
புகாரை பெற்றுக் கொண்ட எஸ்.பி ஷ்யமளா தேவி, ஊரில் அமைதி பேச்சு வார்த்தை நடத்த மங்களமேடு போலீஸ் இன்பெக்டருக்கு உத்திரவிட்டதோடு, விசாரணை நடத்தவும் உத்திரவிட்டுள்ளார்.
இச்சம்பவம், பெரம்பலூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஆளும் ஒன்றிய செயலாளர் மதியழகன் முன்னாள் மாவட்ட செயலாளர் குன்னம். சி.ராஜேந்திரன், மற்றும் முன்னாள் திமுக பிரமுகர் வயலப்பாடி வெங்கடாசலம் போன்றோரையும் தரக்குறைவாக அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை கொண்டு ஆணவமாக பேசிய ஆடியோவும் சமூக வெளியாகி உள்ளது. இதனால், திமுக கட்சியினரிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
வேப்பூர் ஒன்றிய செயலாளர் மதியழனின் மனைவி முத்தமிழ்ச்செல்வி மாவட்ட ஊராட்சி துணை சேர்மனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.