Perambalur: The draft guideline value for revising the market value guide has been put up for public inspection, objections can be raised; Collector Notice!
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47ஏஏ -ன் கீழான தமிழ்நாடு முத்திரை (சொத்துகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல், வெளியிடுதல் மற்றும் திருத்தி அமைத்தலுக்காக மதிப்பீட்டு குழு ஏற்படுத்துதல்) விதிகள் 2010, விதிகளில் விதி 4(2)-ன் படி மைய மதிப்பீட்டு குழு 26.04.2024-ல் நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்பாட்டிற்கு இணங்க பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர், பதிவாளர் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் விவரங்கள் www.tnreginet.gov.in என்ற இணையதள முகவரியில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின் அதனை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் உள்ள சார்பதிவாளரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வழங்கலாம்.
இது குறித்து மேலும் விவரங்களுக்கு சார்பதிவாளர் (நிர்வாகம்) காமராஜ் (99420 26589) என்ற தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.