kalaimalar.com_col_2மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரில் ரூ.908.56 லட்சம் மதிப்பில் விடுதியுடன் கூடிய புதிய தொழிற்பயிற்சி நிலையம் துவங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் 15.9.2015 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து தற்காலிகமாக ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் துவங்க திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் இதற்கான அரசாணை தொழிலாளர; மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசாணை 04.01.2016 அன்று வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில் 6.1.2016 முதல் இரூரில் உள்ள ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதிய தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த விண்ணப்பங்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், ஆலத்தூர் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும் வழங்கப்பட்டு வந்தன. விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.50- ஆகும்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க 18.1.2016 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை 130 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 60 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகின்றது. ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், அவர்களின் நலனை கருத்தில் கொண்டு விண்ணப்பங்கள் வழங்க காலக்கெடு 22.1.2016 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினமே கலந்தாய்வு நடத்தப்பட்டு அதிலிருந்து தேர;ந்தெடுக்கப்படும் மாணவர;களுக்கு புதிய தொழிற்பயிற்சி நிலையத்தில் பயில வாய்ப்பு வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும், இரூரில் உள்ள ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொருத்துநர், இயந்திர வேலையாள், மின்சார பணியாளர், சோலார் டெக்னாலஜி டெக்னீசியன் ஆகிய தொழிற்பிரிவுகளிலும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெல்டர் தொழிற்பிரிவிற்கும் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

தகுதியுடைய மாணவர்கள் இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை 04328-290590 என்ற எண்ணிலோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!