Perambalur : The hottest day started today. The temperature today was a record 107 degrees!
பெரம்பலூர்: தமிழ்நாடு முழுவதும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது. இன்று வெப்பம் அதிகபட்சமாக 107 °F ம், குறைந்த பட்சமாக 86 °F (பாரன்ஹீட்) டிகிரியாகவும் இருந்தது. காலை 11 மணிக்கு தொடங்கிய அனல் காற்று மாலை வரை வீசத்தொடங்கியது.
இதனால் பயணிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
தற்போது, பெரம்பலூர் மாவட்டத்தின் சில ஊர்களிலும், பெரம்பலூர் நகரத்திலும், சில இடங்களில் நிலத்தடி நீர் வெகுவாக குறையத் தொடங்கி உள்ளது.
வரும் புதன் அன்று, மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை வெப்பம் 1079 °F ம், குறைந்த பட்சமாக 85 °°F இருக்கலாம் என வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.