Perambalur: The married Love couple took refuge in SP office seeking protection!
பெரம்பலூரில் உள்ள போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில், இன்று புதிதாக திருமணம் செய்த கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்துள்ள வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜின் மகள் சுவாதி என்பவர் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் (25) ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளார். இதற்கு சுவாதி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தும், மணிகண்டன் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது
இந்நிலையில், சுவாதிக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் திட்டமிட்டு வந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய சுவாதி – மணிகண்டனுடன் காதல் ஜோடி, கடந்த 16 ஆம் தேதி கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், மணிகண்டன் சுவாதி குடும்பத்தை விட வசதி வாய்ப்பில் குறைவு என்பதால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி சுவாதியும் மணிகண்டனும், பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் இருதரப்பு வீட்டாரையும், அழைத்து பேசி சமாதனம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு, காதல் ஜோடிக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர்.
இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது