Perambalur: The panchayat president filed a complaint with the police demanding action against the officer threatening to resign from the post of Preisdent!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத் தலைவராக இருப்பவர் அஞ்சலம் (47). இவர், ஜுன்.12ம் பெரம்பலூர் போலீஸ் டி.எஸ்.பி-யிடம் மனு ஒன்றை அளித்தார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதன் சுருக்கம்; தான் மேட்டுப்பாளையம் தலைவராக இருப்பதாகவும், அந்த ஊரில் விவசாயிகளின் உலர் களம் ( கதிரடிக்கும் களம்) அமைப்பதில் பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு வந்தாகவும், இதில் கிராமத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடந்ததாகவும், அதில் தற்போது மாசு கட்டுப்பாட்டு வாரிய கடித வரைவிற்கு காத்திருப்பதாகவும், அதுவரை கிராமத்தில் இரு தரப்பும் அமைதியாக இருந்து வருவதாகவும், பெரம்பலூர் மாவட்ட திட்ட இயக்குனராக இருக்கும் லலிதா என்பவர் ஊராட்சிகள் பணிகள் குறித்து பேச பிடிஓ வழியாக அழைத்தன் பேரில் சுமார் மாலை 6 மணிக்கு அவரது அலுவலகத்திற்கு சென்றதாகவும், அங்கு அவர் தன்னிடம் அவரது சாதி பெயரை சொல்லி திட்டியதோடு, படிக்காத உனக்கு எதற்கு தலைவர் பதவி, பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய்விடு என மிரட்டியதாகவும், இதற்கு அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.