Perambalur: The patient who came for treatment ran away! Relatives – hospital staff quarrel!! Police investigation!!

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி தப்பி ஓடியதால், உறவினர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், பெண்ணகோணம் கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார் (36). கோயம்பேட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். மது குடிக்கும் பழக்கத்தை கடந்த நாட்களாக நிறுத்தி உள்ளார். இதில், அவருக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்காக அவரது மைத்துனர் கலைவாணன் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்து ரூ. 200 கன்சல்டிங் பீஸ் – ம் செலுத்தி உள்ளார்.

கலைவாணன் மனைவி கர்ப்பமாக உள்ளதால் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருந்திற்கு பணம் செலுத்த வேண்டும் என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தால் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், முதலுதவி செய்து சிகிச்சை எடுத்த நோயாளியான மகேஸ்குமார் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். அந்த மருத்துவமனை மருத்துவர் மற்றும் ஊழியர்கள் துரத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை. அதற்கு தப்பித்து தலைமறைவானார்.

கலைவாணன், மற்றும் மகேஸ்குமாரின் சகோதரிகள் வந்து பார்த்த போது , மகேஸ்குமார் காணவில்லை என தெரிவித்த நிலையில், மருந்திற்கு பணம் கேட்ட நீங்கள் ஏன் மகேஸ்குமார் ஓடிப்போனதை ஏன் செல்போன் தெரிவிக்கவில்லை என மருத்துவமனை ஊழியர்களிடம் கடும் வாக்குவாததில் ஈடுபட்டனர். இதை அறிந்த மருத்துவர் அவருக்கான எந்த கட்டணமும் செலுத்த வேண்டாம், அவரை தேடி கண்டுபிடியுங்கள் என தெரிவித்து அனுப்பி வைத்தார்.

4 மணி நேரமாக தேடியும் மகேஸ்குமார் கிடைக்காததால், அவரது உறவினர்கள் பெரம்பலூர் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் மகேஸ்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அந்த மருத்துவமனை பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!