Perambalur: The police created awareness among the villagers about theft and suicides.

பெரம்பலூர் மாவட்ட கிராம காவலர்கள் சார்பில் பொதுமக்களிடம் ம் திருட்டு மற்றும் தற்கொலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் முன் உள்ள ஜன்னல், வீட்டின் மேற்கூரை, அலமாரி, பீரோ, போன்றவற்றின் மீது சாவியை வைப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும், விடுமுறை காலம் வருகிறது என்பதால் நீண்ட நாள் பயணமாக வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அல்லது தங்களது கிராம காவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் வீட்டை பாதுகாப்பதற்காக சிறப்பு ரோந்து மேற்கொள்ளப்படும் என்றும் எடுத்துரைத்தனர்.

தற்கொலைகள் எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது என்றும் தங்களது குழந்தைகள் அல்லது பெரியவர்கள் எவராயினும் அவரிடம் ஆறுதல் தரும் வகையில் பேசி பழகுங்கள்.

வயலுக்கு மருந்து அடிக்க பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி போன்ற உயிர்கொல்லி மருந்துகளை வீட்டில் வைக்க வேண்டாம் என்றும், மேலும் தங்களது குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் வழியிலோ அல்லது பள்ளியிலோ வேறு ஏதேனும் இடங்களிலோ பிரச்சனைகள் இருக்கின்றதா என்று பெற்றோர்களாகிய நீங்கள் சிறிது நேரம் ஒதுக்கி தங்களது குழந்தைகளிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டு அதனை சரி செய்து வையுங்கள் என்றும், பணிச்சுமை அல்லது குடும்பப் பிரச்சனை போன்ற காரணங்களால் மன அழுத்தத்தில் இருக்கும் தங்கள் குடும்பத்தினரை மருத்துவ ஆலோசனை கொடுத்து அவர்களது மனநிலை அறிந்து அதற்கேற்ற தீர்வு அழளியுங்கள் என்றும் பொதுமக்களிடம் கிராம காவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!