Perambalur: The public handed over the person who stole jewelry and money from the opposite house to the police!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் உள்ள நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (28), இவர் கடந்த 6ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, அரியலு{ர் வங்கிக்கு சென்றுவிட்டார். அவரது அம்மா சுமதி சாலக்குறிச்சியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் சுரேஷின் சின்ன தாத்தா ராஜமாணிக்கம் என்பவர் அவ்வழியாக, வந்த போது எதிர் வீட்டு வாலிபர் ராஜா (எ) காட்டுராஜா (38) சுரேஷின் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இது குறித்து சுரேசுக்கு தகவல் கொடுத்ததன் பேரில், வீட்டில் வந்து பார்த்த போது, பீரோவில் இருந்த 6 கிராம் பவுன், ரொக்கம் ரூ.38,000த்தை திருடி சென்றது தெரியவந்தது.
ஊர் பொது கிராமமக்கள் காட்டுராஜாவிடம் நடத்திய விசாரணையில், திருடிய ஒப்பபுக் கொண்டதுடன், அரியலூரில் நகையை அடகு வைத்துள்ளதார். மேலும் ரொக்கம் ரூ. 25ஆயிரத்தையும் செய்து, நேற்று குன்னம் போலீசில் ஓப்படைத்து புகார் கொடுத்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், காட்டுராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.