பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் 67வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தியாகளுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்து, 161 பயணாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 1 கோடியே 61 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் எழில்மிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் அனைத்து துறையினரும், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.