Perambalur; The robber who was trying to snatch the gold chain from the woman who was on a bike with her husband slipped and ran away
பெரம்பலூர் அரியலூர் சாலையில் உள்ள கலை நகரை சேர்ந்தவர் ரமேஷ் (50). இன்று இரவு சுமார் 8 மணி அளவில் வீட்டிற்கு தனது சிவதர்ஷினி (45) உடன் யமாஹா பைக்கில் சென்று கொண்டிருந்தார்
அப்போது,
பின்னால் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் சிவதர்ஷினி அணிந்திருந்த 4 பவுன் தாலிக் சங்கிலியை பறித்தனர். சுதாகரித்துக் கொண்ட சிவதர்ஷினி கொள்ளையனின் கையைப் பிடித்தார். இதில் சிவ தர்ஷினி கொள்ளையன் இரண்டு பேரும் வாகனங்களில் இருந்து கீழே விழுந்தனர். இதைக் கண்ட வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அங்கு கூடினர் இதை கண்ட கொள்ளையன் காயங்களுடன் வந்த வண்டியில் ஏறி தப்பி மறைந்தான்.
இந்த சம்பவத்தில் சிவதர்ஷினிக்கு வலது காலில் லேசான காயம் ஏற்பட்டது மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார் மேலும். தர்ஷினி திருடன் கையை பிடித்ததால் அவருடைய நான்கு பவுன் தாலி செயின் இன்று தப்பியது. இதன் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் இருக்கலாம். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.