Perambalur: The work of providing polio drops to 43,442 children was done today!
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆக மொத்தம் 387 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி, சுகாதார பணியாளர்கள், அங்கான்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆக மொத்தம் 1,548 பணியாளர்கள் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், கலெக்டர் கற்பகம், பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், ஆகியோர் போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தனர். நகராட்சி தலைவர் அம்பிகா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் என். ராஜேந்திரன், திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் உள்பட பலர் உடனிருந்தனர்.