Perambalur: Theft of sand with the complicity of officials in Chinnaar: Government loses lakhs! Don’t listen!!

File Copy
பெரம்பலூர் மாவட்டத்தில், பச்சைமலையில் உற்பத்தியாகி எறையூர் வழியாக சின்னாறு செல்கிறது. சின்னாறு செல்லும், கிழுமத்தூர், வயலப்பாடி, கீழப்பெரம்பலூர், வீரமநல்லூர் பகுதிகளில் உள்ள ஆற்றங்கரையோரம் வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் மணல் மாஃபியாக்ககள் லாரிகள் மூலம் தினந்தோறும் மணலை திருடி செல்கின்றனர். மேலும், தடுக்காத ஒத்துழைப்பு கொடுக்கும் அனைத்துறை அதிகாரிகளுக்கும், உரிய முறையில் சிறப்பாக மணல் மாபியாக்கள் மாதந்தோறும் லட்சகணக்கில் கவனிக்கின்றனர். இது மேலிடம் வரை செல்வதால் எவரும் கண்டு கொள்வதில்லை.
புகார் அளிப்பவர்களை மணல் மாபியாக்களிடம் அதிகாரிகளே போட்டுக் கொடுக்கின்றனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக, அரசு சொத்தான மணலை காக்க வேண்டிய அதிகாரிகள் சிறப்பு கவனிப்பால் பொது சொத்து என்ன ஆனால் என்ன? தங்கள் பாக்கட் நிரம்புகிறதா என கருப்பு பணத்தை எண்ணிக் கொண்டு இருக்கின்றனர்.
மேலும், மாவட்ட உயர் அதிகாரிகளும், அரசியல்வாதிகளின் அறிவிக்கப்படாத பிரச்சார பீரங்கியாக செயல்படுகின்றனர். மாவட்ட உயர் அதிகாரிகளையும் கூண்டோடு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகளுக்கும் உரிய பங்கு கிடைப்பதால், அரசு சொத்துக்கள் கொள்ளை போவது குறித்து மாவட்டத்தில் கேட்க எந்த ஒரு நாதியும் இல்லை!