Perambalur: Thousands participate in Masi Festival at Kaulpalayam Sri Bhadrakaliamman Temple!

பெரம்பலூர் அருகே அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி, பூங்கரகம் சுமந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன்: பார்ப்போரை மிரட்சி அடைய செய்து, பக்தி பரவசத்துடன் நடைபெற்ற காளி ஆட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள கவுல் பாளையம் கிராமத்தில், காளியம்மன் நகரில் உள்ள பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

11 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி நாள்தோறும் ஸ்ரீ பத்ரகாளி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை மற்றும் திருவீதி உலா நடைபெற்று வந்த நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் நாக்கு, கண்ணம், இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் அலகு குத்தியும், கைகளில் தீச்சட்டி ஏந்தியும், தலையில் பூங்கரகம் சுமந்தும், பர்ப்போரை மிரட்சியடைய செய்யும் காளி ஆட்டத்துடன் கவுல் பாளையம் பிள்ளையார் கோவிலில் இருந்து காளியம்மன் நகருக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கோவிலில் கிடா வெட்டும் நிகழ்வும், மாவிளக்கு பூஜையும், நடைபெற்றது. இதில் பெரம்பலூர் அரியலூர் தஞ்சாவூர் திருச்சி சேலம் தர்மபுரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காளி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டு வேண்டுதல் வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று மஞ்சள் நீராட்டு விழா உடன் திருவிழா நிறைவடைந்தது. அதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தாக்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட காளியம்மன் நகர் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!