பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் அருகே உள்ள பரவாய் கிராமத்தில் உள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயில் திருத்தேர் மற்றும் தீ மிதிதிருவிழா இன்று நடைபெற்றது.
கடந்த 9ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி திருவிழா ஒரு வாரமாக சாமி சிறப்புஅபிஷேகம் சாமி அலங்காரம் சாமி வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இந்நிலையில் திருவிழா கடைசி நாளான இன்று 9ம் நாள் தேர் இழுக்கும் நிகழ்ச்சி மற்றும் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடை பெற்றது திருத்தேர் இன்று காலை கோயிலில் இருந்து புறப்பட்டு பரவாய் கிராமத்தில் உள்ள நடுத்தெரு கிழக்கு தெரு ஆகிய முக்கி விதி வழியாக ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட50 க்கும் மேற்பட்டோர் தேரை சுமந்து ஊரை சுற்றி வந்தனர். மாலை தேர் கோயிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து தீ மிதி திருவிழா நடை பெற்றது.
இதில் தீருவிழாவில் பரவாய் கிராமத்தை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர் இந்த தேர் திருவிழாவில் பரவாய் கிராமத்தை சுற்றியுள்ள வேப்பூர், ஆய்க்குடி ,ஆண்டி குரும்பலூர், கல்லம்புதூர் , உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்ளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.