Perambalur: Tipper truck collides with bike; An unidentified person was killed! Police investigation!
பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூர், ஊட்டத்தூர் பிரிவு சாலை அருகே டிப்பர் லாரியும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பைக்கில் வந்தவர் பரிதாபமாக உடல்நசுங்கி உயிரிழந்தார்.
அடையாளம் நபர் ஒருவர் பைக்கில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஊட்டத்தூரில் இருந்து வந்த டிப்பர் லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தும் அவர் தலையில் பலத்த அடிப்பட்டதில் இறந்து விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இறந்தவரின் உடலை மீட்டு,
பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார்
டிப்பர் லாரியின் டிரைவரான பெரம்பலூர் மாவட்டம், முருக்கன்குடி கிராமத்தை சேர்ந்த சுந்தரம் மகன் சாமிக்கண்ணு என்பவரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பலியானவரை வாகனத்தின் பதிவெண் கொண்டு அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மழைபெய்து வேளையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.