Perambalur to 39 people near the house demolished and a 3 half years imprisonment in the case of Damage

பெரம்பலூர் அருகே வீட்டை இடித்து சேதமாக்கிய 39 பேருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள அன்னமங்கலம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் நல்லு மகன் ரெங்கசாமி( வயது 64). இவரது மனைவி ராஜம்மாள்( வயது 56). அதே பகுதியை சேர்நதவர்கள் போஜன் மகன் துரைராஜ் (வயது 62),பெத்தன் மகன் வெள்ளையன் (வயது 51), பொன்னுசாமி மகன் சங்கர்( வயது 48) ஆகியோர் ரெங்கசாமி தனது நிலத்தில் பட்டி போட்டு ஆடுகள் வளர்த்து வருகிறார். அந்த இடத்திற்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் இருந்துள்ளது. அந்த நிலத்தை கடந்த 1985ம் ஆண்டு துரைராஜ் உள்ளிட்ட 19 பேர் பணத்தை வாங்கிகொண்டு ரெங்கசாமிக்கு விற்றுள்ளனர்.

அந்த இடத்தில் ஆஸ்பெட்டாஸ் சீட் போட்டு வீடு கட்டி ரெங்கசாமி குடியிருந்து வருகிறார். இதனிடையே ரெங்கசாமியிடம் வீட்டை காலிசெய்யவேண்டும் என கோரி துரைராஜ் உட்பட 3 பேரும் வற்புறுத்தியுள்ளனர். இது குறித்து ரெங்கசாமி பெரம்பலூர் முன்சீப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த துரைராஜ், வெள்ளையன், சங்கர் தனது நண்பர்கள் 39 பேருடன் சென்று கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம்தேதி ரெங்கசாமியின் வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து ரெங்கசாமி மற்றும் அவரது மனைவி ராஜம்மாள் ஆகியோரை தாக்கியதோடு, வீட்டையும், வீட்டிலிருந்த பொருட்டுகளை உருட்டு கட்டையால் அடித்து சேதப்படுத்தினர்.

இது குறித்து ரெங்கசாமி கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீசார் சொத்துக்கு சேதம் மற்றும் இழப்பை தடுத்தல் சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட துரைராஜ், வெள்ளையன், சங்கர் உட்பட 39 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் நடந்தது வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகாந்த் குற்றவாளிகளான துரைராஜ், வெள்ளையன், சங்கர் உட்பட 39 பேருக்கும் 4 சட்டபிரிவின் கீழ் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டடைனயும், ரூ.2 ஆயிரம் அபராதம் கட்டவேண்டும். அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும், சிறை தண்டனையை ஏகபோக காலத்தில் அதாவது ஓராண்டு காலம் அனுபவிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!