Perambalur to find entrepreneurs in the district entrepreneurship awareness camp going on July – 12

பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களை கண்டறிவதற்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் ஜுலை12-ம் தேதி நடக்கிறது

Training and Development - Business

Training and Development – Business

மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக முதல்வர் அவர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த பல திட்டங்களை அறிவித்துள்ளார்கள் மானியங்களுடன் கூடிய கடனுதவி, ஈடு உத்திரவாத நிதியம் மற்றும் முயற்சி மூலதன நிதியம் போன்ற திட்டங்கள் அரசின் கொள்கையளவில் வடிவுபெற்றுள்ளன.

இதன் ஒரு பகுதியாக சிறந்த தொழில் முனைவோர்களை கண்டறிய சென்னையிலுள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமும் தொழில் மற்றும் வணிகத்துறையின் மாவட்ட தொழில் மையமும் இணைந்து பெரம்பலூர் ரெட்டியார் அரங்கம், பழைய பேருந்து நிலையம் வடபுறம், பெரம்பலூரில் 12.07.2016 முற்பகல் 9.30 மணி முதல் 5.00 வரை தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்த இருக்கிறது.

சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட தொழில் துறையில் அனுபவமிக்க மற்றும் ஏதேனும் தொழிலில் அடிப்படை பயிற்சி பெற்ற ஆண், பெண் அனைவரும் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம்.

முதல் கட்டமாக சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்வது எப்படி தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும்.

பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் இரண்டாம் கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவார்.

இரண்டாம் கட்ட 5- நாள் பயிற்சியில் இந்த தொழில் முனைவோர்களுக்கு தொழில் வணிக வடிவம் மற்றும் திட்ட அறிக்கை தயாரித்தல் பற்றிய பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.

தகுதி உள்ளவர்கள் அரசு வழங்கும் மானிய திட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன்மூலம் நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். இப்பயிற்சிகளில் தொழில் முனைவோர்கள் மேம்பாட்டு நிறுவனத்துடன் மாவட்ட தொழில் மையமும் இணைந்து செயல்படும். எனவே, அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்படும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும்.

மேலும் தகவல்களுக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை 04328 -291595 , 9443413897 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!