Perambalur: To set up a dry field grain storage warehouse for farmers, there was a stir as two parties petitioned the Collector’s office one after the other!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்டது மேட்டுப்பாளையம். இக்கிராமத்தில் அண்ணா கிராம மறுமலர்ச்சி 2024 -25 ம் ஆண்டு திட்டத்தின் கீழ் கதிர் அடிக்கும் களம், விவசாய தானியக் கிடங்கு கட்ட கடந்த 29-02-2024 ல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு வேலை உத்தரவு கடந்த 08.03.2024 அன்று தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் தலைமையில் ஒரு பிரிவினர் அப்பகுதியில் கதிர் அடிக்கும் களம், விவசாய தானியக் கிடங்கு கட்டக்கூடாது என்றும், கட்டினால் சுகாதார கேடு ஏற்படும் என்றும், இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் ஆபிசில் வந்து மனு கொடுத்தனர்.
இதே போல அதே கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் தெரிவித்ததாவது:
மேட்டுப்பாளையம் கிராமத்தில் தற்போது, கதிர் அடிக்கும் களம், விவசாய தானியக் கிடங்கு கட்டுமான பணிகள் முறையாக அனுமதி பெற்றே நடந்து வருகிறது. அதற்கு முன்பாக ஊராட்சித் தலைவர் மற்றும் வி.ஏ.ஓ உள்ளிட்டவர்கள் இடத்தை முறையாக தேர்வு செய்து கொடுத்ததான். தற்போது, ஊராட்சித் தலைவர் அந்த பணி செய்யும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை ஊரில் உள்ள 10 சதவீத அப்பாவிகளை தூண்டிவிட்டு கலவரம் செய்ய பார்க்கிறார். ஆனால், அங்கு வசிக்கும் 90 சதவீத மக்கள் தேர்வு செய்த இடத்திலேயே கதிர் அடிக்கும் களம், விவசாய தானியக் கிடங்கு கட்ட வேண்டும் என விரும்புகின்றனர். வருவாய் துறை ஆட்சேபனை எதுவும் இல்லை. வேப்பந்தட்டை பிடிஓ, கட்டுமான பணிகளை தனியார் நிறுவனம் தொடங்க வி.களத்தூர் போலீசார் சார்பில் பாதுகாப்பு வழங்க 08.05.2024 அன்று கடிதம் வழங்கி உள்ளார். மேலும், தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியிருந்தனர்.
இருதரப்பிலும் மனு பெற்றுக் கொண்ட மாவட்ட உயர் அதிகாரிகள் ஊரில் வந்து நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக இருதரப்பினரிடையே உறுதி அளித்தனர். அதன் பேரில் இருதரப்பினரும் ஊர்களுக்கு திரும்பி சென்றனர்.
பெரம்பலூர் கலெக்டர் ஆபிசில் அடுத்தடுத்து ஒரே ஊரைச் சேர்ந்த இருதரப்பினரும் மனு கொடுக்க வந்த சம்பவம் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.