Perambalur: Tollgate Staff Struggle: For the 3rd day the vehicles are traveling without charge

பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்க சாவடியில் பணியை புறக்கணித்து இன்று 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணித்து வருகின்றன.

திருமாந்துறை பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கவரி வசூல் சாவடி வசூல் மையம் உள்ளது. இந்த டோல்கேட் வழியாக தினமும் ஆயிரக்கனக்கான வாகனங்கள் தமிழகத்தின் தென்பகுதியான திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

இந்த டோல்கேட்டில் சுங்கவரி வசூல் செய்யும் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், காவலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு வழங்க வேண்டியும், பணி பாதுகாப்பு வழங்க கோரியும் கடந்த ஒருவார காலமாக கறுப்பு பேட்ச் அணிந்து போராடி வந்தனர்.

இந்த நிலையில் கோரிக்கையை ஏற்காத நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு ஜெனரல் ஒர்க்ர்ஸ் யூனியன் சார்பில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் சுங்கவரி வசூல் செய்யும் பணியை புறக்கணித்து போராட்டத்தை தொடங்கினர். இதனால் சென்னை ‘ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் செல்லும் வாகனங்கள் கட்டணமில்லாமல் இலவசமாக சென்று வருகின்றன.

திருமாந்துறை டோல்கேட் பகுதியில் மங்களமேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!