Perambalur traffic police who sent a replacement bus and helped to catch the missed bus and go to town with belongings!

பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டில், இன்று மாலை, கல்லூரி மாணவி ஒருவர் குடும்பத்தாருடன் தான் வந்த பேருந்தை தவற விட்டு விட்டதாகவும், அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் தமிழ்ச்செல்வனிடம் உதவ கேட்டுக் கொண்டதால், அவர் அவர்களை அதே பஸ்சில் செல்ல நடவடிக்கை எடுத்தார். அதனால், அவர்களது, உடைமைகள் பாதுகாப்பட்டு உரிய ஊருக்கு சென்றனர்.

திருச்சியில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு அரசு பஸ் சென்றது. அது பெரம்பலூர் பஸ் ஸ்டாணட் வந்த போது, சிறுநீர் கழிக்க, டீ, காபி குடிக்க சுமார் 10 நிமிடம் நிறுத்தி பெரம்பலூர் பயணிகளை இறக்கி விட்டும், பிற ஊர்களுக்கு நெடுந்தொலைவு செல்லும் பயணிகளை ஏற்றி செல்வதும் வழக்கம்.

நேற்று மாலை, பயணிகள் அதிக அளவில் இருந்ததால், பஸ் புதுச்சேரி நோக்கி சென்றது. பஸ்சில் வந்தவர்கள் இறங்கி திரும்ப பஸ்சிற்கு வர அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், பஸ்சை தவறவிட்டனர். பின்னர், அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது, பஸ் ஓரிரு நிமிடங்களுக்கு முன்பு தான் சென்றதாகவும், அவர்கள் வருகைக்காக காத்திருந்ததாகவும், அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

தாய் – தந்தையுடன் வந்த கல்லூரி மாணவி, அங்கு பணியில் இருந்த டிராபிக் போலீஸ் தமிழ்ச்செல்வனிடம் நடந்ததை தெரிவித்து உதவும் படி கோரினார். அவர் உடனடியாக 4 ரோடு, போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த போது பஸ் சற்று முன் தான் சென்றதாக தெரிவித்தார். பின்னர், உடனடியாக பின்னால், வந்த சென்னை பஸ்சில் ஏறிச் செல்லுமாறும், அதற்குள் அந்த வண்டியை திருமாந்துறை டோல்கேட்டில் நிறுத்த முயற்சி எடுப்பதாகவும், தெரிவித்தார்.

அதற்குள் அந்த பஸ்சின் கண்டக்டர் செல்போன் நெம்பரை பின்னால், வந்த பஸ் கண்டக்டரின் உதவியுடன் பெற்று, அவருடைய பஸ்சில் வந்தவர்கள் பின்னால் வரும் சென்னை பஸ்சில் வந்து கொண்டு இருக்கிறார்கள், அவர்களுடைய உடைமைகளை பாதுகாத்து வைக்கும்படியும், நிறுத்தி ஏற்றி செல்லுமாறு தகவல் தெரிவித்தார். அதே போல், பின்னால் சென்ற பஸ்சின் டிரைவர் கண்டக்டர்கள் இருவரும் புதுச்சேரி சென்ற அந்த பஸ் அருகே நிறுத்தி அவர்களை ஏற்றி விட்டனர். பின்னர் அவர்களது சொந்த ஊரான உளுந்தூர்பேட்டைக்கு, உடைமைகளுடன் பாதுகாப்பாக சென்றனடைந்தனர்.

பஸ்சை தவறவிட்ட பயணிகளை, உடைமைகளுடன் உரிய ஊருக்கு சென்றடைய உதவி செய்த போக்குவரத்து போலீஸ் தமிழ்ச்செல்வனை அங்கிருந்தவர்கள், போக்குவரத்து ஊழியர்கள் பெரிதும் பாராட்டினர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!