Perambalur: Training Course for Postal Counting Officers; Led by the Collector!

தபால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கற்பகம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

அப்போது அவர் பேசியதாவது:

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையானது 04.06.2024 அன்று ஆதவ் பப்ளிக் பள்ளியில் நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 6 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகளை எண்ணும் பணிக்கு தலா 6 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் என 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தபால் வாக்குகளை எவ்வாறு எண்ண வேண்டும், தபால் வாக்குகள் முறையான படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, சரியாக உறைகள் இடப்பட்டு வழங்கப்பட்டுள்ளதா என்பதை மிகக்கவனமாக கண்காணிக்க வேண்டும்.

தபால் வாக்கு படிவத்தில் யாதொரு வாக்கும் பதிவு செய்யப்படாமல் இருந்தாலோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது போலியான வாக்குச்சீட்டாக இருந்தாலோ, அல்லது வாக்குச்சீட்டு உண்மையானது என்பதை நிரூபிக்க இயலாத வகையில் அது சேதமடைந்து இருந்தாலோ அல்லது தேர்தல் நடத்தும் அலுவலரால் வாக்காளருக்கு அனுப்பப்பட்ட உறை – B உடன் சேர்த்து அது திருப்பி அனுப்பப்படாமல் இருந்தாலோ அல்லது எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த ஐயத்திற்கிடமாக இருக்கும் வகையில் வாக்குச்சீட்டில் குறியீடுகள் இருந்தாலோ அல்லது வாக்களிப்பவரை இன்னார் என்று அடையாளம் காட்டும் வகையில் அடையாளக் குறியீடு அல்லது சொற்றொடர் எவையும் எழுதப்பட்டிருப்பின் அத்தகைய வாக்குச்சீட்டுகள் நிராகரிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எனவே, தபால் வாக்குகளை எண்ணும் போது மேற்சொன்ன விதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்று தபால் வாக்குகள் எண்ணும் போது என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்த விளக்க கையேடு உங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் அதில் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி தபால் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட வேண்டும், என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தேர்தல் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!