பெரம்பலூர் அருகே பத்ரகாளியம்மன் கோவில் நடைபெறும் திருவிழாவையொட்டி தங்கள் வேண்டுதல் நிறைவேறியதால் 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.
பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் கிராமம் காளியம்மன் நகரிலுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா ஓவ்வொரு ஆண்டு தோறும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் 12 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 23&ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்சியுடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதணை, சாமி திருவீதி உலா, பூஜைகள் நடைபெற்றது.
பிள்ளை வரம் வேண்டியும், பில்லி, சூனியம், ஏவல் நீக்கவும், தீராத நோய் தீரவும், செல்வ செழிப்புடன் வாழ வேண்டியும் பத்ரகாளியம்மனை வணங்கி தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள்.
இதன்படி திருவிழாவின் 8ம் நாளான இன்று தீ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300&க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து தீ மிதித்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினார்கள்.
இதனைத்தொடர்ந்து நாளை தீச்சட்டி ஏந்துல், அலகு குத்துதல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், நாளை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், நாளை மறுநாள் சாமி வழி விடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் முக்கியஸ்தர்கள் மற்றும் காளியம்மன் நகர் முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.