Perambalur: Transport Minister Sivasankar, with 3.04 crore project works in Veppur union, bus operation on new route!

போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் கற்பகம் தலைமையில், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.3.04 கோடி மதிப்பிலான பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பேருந்து சேவையினையும் தொடங்கி வைத்தார்.

பேரளி ஊராட்சிக்குட்பட்ட பனங்கூர் அருந்ததியர் தெருவில் ரூ.14.74 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாயுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, சித்தளி ஊராட்சிக்குட்பட்ட பீல்வாடி காலனி தெருவில் ரூ.16.75 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணி, பீல்வாடி புது காலனி தெருவில் ரூ.18.70 லட்சம் மதிப்பீட்டில் சேகர் வீடு முதல் அழகுதுரை வீடு வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, வைத்தியநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிகுரும்பலூர், எழுமூர், அந்தூர் ஆகிய பகுதிகளில் தலா ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொது நூலக கட்டிடம் கட்டும் பணி, காடூர் ஊராட்சிக்குட்பட்ட நல்லறிக்கையில் ரூ.3.12 லட்சம் மதிப்பீட்டில் பிள்ளையார் குளம் புனரமைக்கும் பணி என மொத்தம் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் 30 புதிய பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் மிக விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை துரிதமாக மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் எழுமூர் ஊராட்சிக்குட்பட்ட காருக்குடி, பெரிய வெண்மணி ஊராட்சிக்குட்பட்ட புதுக்குடிசை, கொத்தவாசல் ஆகிய கிராமங்களில் தலா ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, பெரியவென்மணி ஊராட்சிக்குட்பட்ட புதுக்குறிச்சி பகுதியில் புது குடிசை முதல் அரியலூர் வழித்தடத்தில் புதிய பேருந்து வசதியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார். சின்ன வெண்மணி அரசுப் பள்ளி ஆண்டு விழாவிலும் கலந்து கொண்டவர், பெரிய வெண்மணியில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு வழங்கினார்.

வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, பெரம்பலூர் திமுக மாவட்ட செயலாளர் ஜெகதீசன், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் சேர்மன் அழகு. நீலமேகம், உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!