பெரம்பலூரில் நடந்த மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள இரு சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றிப்பெற முழுமையாக பாடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் மாவட்ட அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதாவின் 68 வது பிறந்தநாள் விழாகொண்டாடுவது, வரும் சட்டசபை தேர்தல் பணியாற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் அதன் மாவட்ட அவைத்தலைவர் துரை தலைமையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., பூவைசெழியன், நகராட்சி தலைவர் ரமேஷ், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் கர்ணன்,கிருஷ்ணசாமி,சிவப்பிரகாசம், சுரேஷ், பேரூர் செயலாளர்கள் ரெங்கராஜ், செல்வராஜ், வினோத், முகமதுபாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், எம்பி மருதராஜா, எம்எல்ஏ தமிழ்ச்செல்வன்,முன்னாள் துணைசபாநாயகர் அருணாசலம் உட்பட பலர் பேசினர்.
இதில் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது, வரும் சட்டசபை தேர்தலில் பெரம்பலூர், குன்னம் ஆகிய 2 தொகுதிகளில் அதிமுக வெற்றிப்பெறமுழுமையாக பாடுபடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சகுந்தலா கோவிந்தன், துணை தலைவர் சேகர், யூனியன் சேர்மன் ஜெயக்குமார், மாவட்ட அணி செயலாளர்கள் ராஜாராம், கார்த்திகேயன், செல்வகுமார், வக்கீல் குலோத்துங்கன், அரனாரை வைஸ்மோகன்ராஜ், சங்கு சரவணன், பேரளி துரைக்கண்ணு, எசனை பன்னீர்செல்வம், மாணவரணி நிர்வாகி வெண்மணி காமராஜ்,நகர நிர்வாகிகள் சிவக்குமார், முகமதுஇக்பால் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட இணைசெயலாளர் ராணி வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் கவுரி நன்றிகூறினார்.