பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள சாலையோர பள்ளத்தில் டூவீலர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார், மற்றொரு வாலிபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூரைச் சேர்ந்தவர்கள் கோவிந்தன் மகன் வீராசாமி(33), பழனிமுத்து மகன் அழகுவேல்(28), நண்பர்களான இவர்கள் இருவரும் இன்று மதியம் கிருஷ்ணாபுரத்திற்கு வந்து மது அருந்தி விட்டு இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணாபுரத்திலிருந்து வெண்பாவூரை நோக்கி சென்ற போது நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்த வீராசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அழவேல் படுகாயத்துடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுமதி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.