Perambalur Union DMK Executives Advisory Meeting
பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் எஸ்.அண்ணாதுரை தலைமையில், ஒன்றிய அவைத் தலைவர் சுத்தரத்தினம் முன்னிலையில் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், தலைமை கழக தேர்தல் ஆணையர் எம்.ராஜகாந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி, டாக்டர் செ. வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், நகரச்செயலாளர் எம். பிரபாகரன், தொ.மு.ச.மாவட்ட செயலாளர் ஆர்.ரெங்கசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து. ஹரிபாஸ்கர், ஒன்றிய துணை செயலாளர்கள் லெட்சுமணன், மாவட்ட பிரதிநிதிகள் ராமச்சந்திரன், ஆர்.சிவக்குமார், ஆனந்தராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள்,ஊராட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர். தலைவர் மு. க.ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது எனவும், குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசைக் கண்டித்தும், நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் 100% வெற்றி பெற பாடுபட்ட கழகத்தினருக்கு நன்றி தெரிவித்தும், கழக 15 வது தேர்தலை நடத்த கிளைக்கழக நிர்வாகிகள் ஒத்துழைப்பு தருமாறும், முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ. , குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன் மற்றும் பெரம்பலூர் மாவட்டம், சிறுநிலா முருகேசன் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.