Perambalur union strike: 300 arrested Autos do not run away !!
பெரம்பலூர் : காலிப்பணியிடங்களை நிரப்பவும் 8 வது ஊதிய மாற்றத்திற்கான குழு அமைத்திடவும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவும், அவுட்சோர்சிங் முறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிநியமணம் செய்ய வலியுறுத்தியும், அரசுத் துறைகளை தனியார் மையமாக்குவதை தடுத்து நிறுத்தவும், வருமான வரி உச்சவரம்பை உயர்த்தவும், மாநில அரசு ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், தினக்கூலி, தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று அகில இந்திய அளவில் நடைபெற்ற பொது வேலை நிறுத்த்ததை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில், தொழிற்சங்கத்தினர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து மறியலில் ஈடுபட்டனர்.
சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி விவசாயிகள் சங்கம் என்.செல்லதுரை, ஆர்.வேல்முருகன் ஏஐடியுசி வீ.ஞானசேகரன், தியாகராஜன், ஹெச்எம்எஸ் சின்னசாமி சிஐடியு எஸ்.அகஸ்டின், இராஜகுமாரன், கணேசன், முத்துசமி, கிருஷ்ணசாமி உள்பட ஆட்டோ சங்கம் போக்குவரத்து, ஓய்வூதியர் சங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கைதாகினர்.