Perambalur: Uriadi festival on the occasion of Krishna Jayanti!
பெரம்பலூரில் உள்ளள ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபாலசாமி திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று மாலை உறியடி திருவிழா 4 மாட வீதிகளில் பெருமாள் பூதேவி சமேத ஸ்ரீதேவியுடன் உலா வந்து உறியடி பார்த்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
விழாவில் கோவில் பணியாளர்கள், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், குமார், சரவணன், சீர்பாத பணியாளர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கோவிந்தா முழங்க விழாவில் கலந்து கொண்டனர்.
இதே போல, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை, குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, தொண்டைமாந்துறை உள்ளிட்ட பெரும்பாலான கிராமங்களில் இன்று வழுக்கும் மரம் தழுவதல், உறியடித் திருவிழா கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு நடந்தது.