Perambalur: Vaikasi festival at Sangupet: Pongal worship!
பெரம்பலூர் நகர் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி நேற்று மூப்பனார், ஊர்சுத்தியான் சுவாமிக்கு பொங்கல் வைத்து கிராம பொதுமக்கள், குருணி வகையறா சார்பில்,பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சங்குபேட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முத்துமாரிஅம்மன், மூப்பனார் சுவாமிகளை வழிபட்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை 19, 20வது வார்டு கிராம பொதுமக்கள், கிராம காரியஸ்தர்கள், பூசாரிகள்,மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.