Siruvachoor accidentபெரம்பலுார் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் மக்கள் நல கூட்டணி மாநாட்டுக்கு சென்ற வி.சி., கட்சி பிரமுகர் பலியானார். எட்டு பேர் காயமடைந்தனர்.
சென்னை ஐயம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒன்பது பேர் மதுரையில் இன்று நடக்கும் மக்கள் நல கூட்டணி மாநாட்டிற்கு ஒரு மகேந்திரா வேனில் சென்றுக் கொண்டிருந்தனர். வேனை அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவர் ஓட்டினார்.
வேன் பெரம்பலுார் அருகே உள்ள சிறுவாச்சூர் பிரிவு ரோடு அருகே வந்தபோது அப்பகுதியில் இருந்த வேகக்கட்டுப்பாடு பேரிகாடில் வேனின் வலதுபுற டயர் உரசியதில் பின்பக்க வலதுபுற டயர் வெடித்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கி சென்னை ஐயம்பாக்கம் பகுதியை சேர்ந்த வி.சி., கட்சி பகுதி செயலாளர் பாக்கியராஜ் (வயது35), சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். வேனில் பயணம் செய்த வெங்கடேசன் (50), ஜெயராஜ் (35), செந்தில்குமார் (32), மணிமாறன் (35), சுரேந்தர் (30), தயா (25), வேணு (48), ராஜேஸ் (30) ஆகிய எட்டு பேர் காயமடைந்தனர்.
தகவறிந்த பெரம்பலுார் போலீஸார் விபத்துக்கு உள்ளானவர்களை மீட்டு பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறி்த்து பெரம்பலுார் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து தப்பியோடிய வேன் டிரைவர் ரவியை தேடி வருகிறார்.