பெரம்பலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை காலை 10 மணி அளவில் பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ரத்தினவேல் தலைமையில் நடக்கிறது.
பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் வரவேற்புரையும், மாவட்ட பொருளாளர் அ.கலையரசன், மாவட்ட துணைச் செயலாளர் ந.கிருஷ்ணகுமார் , செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் இரா.ஸ்டாலின், பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி துணைச் செயலாளர் பெ.லெனின், குன்னம் சட்ட மன்ற தொகுதி துணைச் செயலாளர் மா.கவியரசன் ஆகியோர் முன்னிலையும் வகிக்கின்றனர்.
மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம் கருத்துரை வழங்குகிறார். மண்டலச் செயலார் இரா.கிட்டு உள்பட பலர் சிறப்புரை ஆற்றுகின்றனர். மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட துணை அமைப்பாளர்கள், பெரம்பலூர், வேபபந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்கள், அரும்பாவூர், பூலாம்பாடி, குரும்பலூர், லப்பைக்குடிக்காடு பேரூர் பொறுப்பாளர்களும் கலந்து கொள்கின்றனர். பெரம்பலூர் நகர பொருளாளர் தங்க.சண்முகசுந்தரம் நன்றி கூறுகிறார். என தெரிவிக்கப்ட்டுள்ளது.