Perambalur: Vehicle facility for differently abled and senior citizens to vote on behalf of the government!

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதிய வாக்காளர்களில் வாக்குச்சாவடி மையங்களுக்கு வர இயலாமல் உள்ளவர்களிடம் அவர்களின் விருப்பத்தின் படி அவரவர் வீட்டிற்கே சென்று தபால் வாக்குகள் பெறப்பட்டது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 1,866 மூத்த வாக்காளர்களும், 1501 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் தங்களது வாக்குகளை தபால் வாக்குகள் மூலம் செலுத்தி உள்ளார்கள்.

தற்போது, அதன் தொடர்ச்சியாக பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோர் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தங்களது வாக்கினை செலுத்த வாக்குச்சாவடிக்கு செல்ல சிரமம் ஏற்படும் பட்சத்தில் தொலைபேசி எண் “1950”, சக்சாம் செயலி (Saksham App) மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 9188 இவற்றில் ஏதோ ஒன்றில் தொடர்பு கொண்டு உதவி கோரலாம்.

மேலும், பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் சண்முகமூர்த்தி என்பவரை 9444437170 என்ற எண்ணிலும், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்டவர்கள் பிரசாந்த் என்பவரை 8778255186 என்ற எண்ணிலும் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்டவர்கள் சசிகலா என்பரை 8489613113 என்ற எண்ணிலும், குன்னம் வட்டத்திற்குட்பட்டவர்கள் வினோதகன் என்பவரை 8940373701 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டால் உங்களை வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்துவர அரசு ஏற்பாடு செய்த வாகனம் தங்கள் வீட்டிற்கு வந்து வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று வாக்களித்த பின் வீட்டில் கொண்டு வந்து விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த வசதியினை பயன்படுத்திக் கொண்டு அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையினை ஆற்ற வேண்டும், என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!