பெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டாரத்தில் வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் இன்று 06.02.2016 பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி முதலில் வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ப.சந்திரன் என்பவர் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட உளுந்து விதைப்பண்ணைகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பெரியவடகரை கிராமத்தில் இராமர், என்பவரின் வயலில் இயந்திர நெல் நடவு முறையில் பயிரிடப்பட்டிருந்த நெல் வயல்களை பார்வையிட்டு இயந்திரம் மூலமாக நடவு செய்த முறைகளையும், இயந்திர நெல் நடவு முறை பயன்பாட்டினால் விவசாயிகள் பெற்ற நன்மைகளையும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
பசும்பலூர் கிராமத்தில் யசோதா, என்பரின் வயலில் மக்காச்சோளம் செயல் விளக்க முறைகளையும், எறையூர் கிராமத்தில் இராமலிங்கம் என்பவரின் வயலில் இயந்திர நெல் நடவு முறை மற்றும் நெல் விதைப்பண்ணை, மங்கலமேடு கிராமத்தில் இராமர், வயலில் பருத்தி செயல் விளக்க திடல் ஆகிய வேளாண்மைத்துறை திட்டப்பணிகள் குறித்தும் முறையான ஆய்வுகளை மாவட்ட ஆட்சியர; அவர;கள் மேற்கொண்டார்.
வேளாண் பொறியியல் துறை மூலம பாண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மற்றும் நெற்குணம் கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி என்பவர்களின் வயல்களில் அமைக்கப்பட்டிருந்த சூரிய மின் மோட்டார் மற்றும் சொட்டுநீர் பாசனம் குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், அரசு வழங்கும் திட்டங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று விவசாயிகளை கேட்டுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் பசும்பலூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் இக்கட்டமைப்பு மூலமாக எத்தனை ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் உள்ளிட்ட தகவல்களை மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
கூட்டுறவுத்துறை கட்டுபாட்டில் இயங்கும் வெண்பாவூர், வி.களத்தூர் தொடக்க வேளாணமை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்தும், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விவசாய கடன்கள் குறித்தும், கூட்டுறவு கடன் சங்கங்களில் தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உடன் இருந்தனர்.