பெரம்பலூர் மாவட்ம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஓலைப்பாடி, நன்னை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது இன்று நேரில் பார்வையிட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் ஓலைப்பாடி ஊராட்சியில் ஒருங்கிணைந்த ஒப்பளிக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.1கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப்பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கட்டுமானப்பணிகளை உரியகாலத்திற்குள் முடிக்கும் வகையில் வேலைகள் துரிதமாக நடைபெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஊரகவளர்ச்சி உதவிப்பொறியாளருக்கு அறிவுரை வழங்கினார். மேலும், பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே கட்டப்பட்டு வரும் அலுவலக அறை மற்றும் கழிப்பறைகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மாதிரி பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் ரூ. 1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய 10 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடத்தின் கட்டுமானப்பணிகளையும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்,
பின்னர். ஓலைப்பாடியில் கிளாசிக் போலோ நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் ஆயத்த ஆடை உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டத்தைச்சேர்ந்த பெண்கள் பணியில் ஈடுபட்டு வருவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், போதிய வசதிகள் உங்களுக்கு தரப்பட்டுள்ளதா என்றும், ஆயத்த ஆடை உற்பத்தி வேலை பயனுள்ளதாக உள்ளதா என்றும் கேட்டறிந்தார். மேலும், ரூ.28.50 லட்சம் மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்டு, தற்போது ஆயத்த ஆடை உற்பத்தி செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ள கட்டடத்தையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
பின்னர; செய்தியாளர;களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர; அவர;கள், தற்போது ஓலைப்பாடியில் இயங்கிவரும் ஆயத்த ஆடை உற்பத்தியில் பெரம்பலுhர; மாவட்டத்தைச்சேர;ந்த சுமார; 400க்கும் மேற்பட்ட பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர; என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போலவே, நன்னையில் ஆயத்த ஆடை உற்பத்திக்காக கட்டடங்கள் புணரமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கும் ஆயத்த ஆடை உற்பத்தி நடைபெறும். பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்தி;ட்டம் அவர;களுக்கு பெரிதும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று தெரிவித்தார்.
இந்த பயணத்தின் போது, வேப்பூர் கல்லுhரி முதல்வர முனைவர;.என்.சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிச்சாமி, சிவக்குமார், உதவிப் பொறியாளர் ஆனந்தன், ஓலைப்பாடி ஊராட்சிமன்றத் தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.