Perambalur: Villagers complain against Solar Power Company for encroachment on Eeri Varattu canal!
தெரணி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், தெரணி கிராமத்தில் சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்ய புரோஜென் ரெனிவபல் நிறுவனம் விவசாயிகளிடம் நேரிடையாகவும், பவர் பத்திரம் போட்டும், ஏஜெண்டுகள் மூலமாகவும் நிலம் வாங்கப்பட்டுள்ளது.
தெரணி கிராமத்தில் உள்ள விவசாயிகள் சாகுபடி பரப்பை அதிகப்படுத்திட அரசு சார்பில் புது ஏரி அமைக்கப்பட்டு ஏரிக்கு நீர்வரத்து வாய்க்கால வெட்டப்பட்டுள்ளது. தனியார் மின்உற்பத்தி செய்யும் புரோஜென் ரெனிவயல் கம்பெனி ஏரிக்கு நீர்வரத்து வாய்க்கால்களை தூர்த்து ஆக்கிரமிப்பு செய்து சட்ட விரோதமாக தூர்த்து சமம் செய்து பயன்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக இந்த ஏரிக்கு வரும் நீர்வரத்து மழைக் காலங்களில் தண்ணீர் வருவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும் . இதுபற்றி மாவட்ட நிர்வாகம் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள வரத்து வாய்க்காலை மீட்டு ஏரிக்கு நீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.
மேலும், தனியார் மின்உற்பத்தி நிறுவனம் மேலும் தெரணி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், கல்லாங்குத்து புறம்போக்கு நிலம், வண்டி பாதை புறம்போக்கு நிலம், குட்டை புறம்போக்கு நிலம் உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான சுமார் 30 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து, அதனை சமப்படுத்தி அந்த நிறுவனம் பயன்படுத்தி வருகின்றது. தெரணியில் எந்தெந்த சர்வே எண்ணில் எவ்வளவு நிலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்ற விபரம் இத்துடன் இணைத்துள்ளதாகவும்,
மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
தமிழ்நாடு பூமி தானம் இயக்கம் மூலமாக சாகுபடி செய்வதற்காக விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை வேறு எவருக்கும் விற்க முடியாது. பட்டா பெற முடியாது என்ற நிலையில் அந்த நிலத்தினை சூரிய ஒளியில் மின்உற்பத்தி செய்யும் புரோஜென் ரெனிவபல் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது பற்றி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெரணி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மைன்ஸ் இடம் தெரணி சர்வே எண்.337/1, 337/2, 337/3 எந்த வகையில் அந்த நிலம் தனியார் மின்உற்பத்தி நிறுவனத்திற்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்,
மேலே தெரிவித்துள்ள கோரிக்கையின் பேரில் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்டு கொடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை தெரணி கிராம பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருந்தனர்.