Perambalur: Vote awareness rally on behalf of Aswin Sweets & Snacks; Launched by the Collector!
ஏப்.19ம் தேதி நடைபெறவுள்ள எம்.பி தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அஸ்வின் குழுமத்தின் சார்பில் அந்நிறுவன ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கற்பகம், நகராட்சி அலுவலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெரம்பலூரில் உள்ள அஸ்வின் குழுமத்தில் பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணியானது, பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி, பாலக்கரை அருகே உள்ள தனியார் மைதானத்தில் முடிவடைந்தது.
பேரணியின் முடிவில் வாக்களிக்கும்போது விரலில் வைக்கப்படும் மையுடன் உள்ள கை வடிவில் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி நின்று வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து கோஷங்களை எழுப்பினர். கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கற்பகமும் கலந்து கொண்டார்.
அஸ்வின்ஸ் குழுமத் தலைவர் கே.ஆர்.வி கணேசன், அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.