Perambalur : Voters without MP Voter Photo ID can use one of 12 documents – Election Commission
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 19.04.2024 அன்று பாராளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், பின்வரும் 12 வகையான ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி / அஞ்சலக கணக்குப்புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு,
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய மாநில அரசுகள்/பொதுத் துறை நிறுவனங்கள்/வரையறுக்கப்பட்ட பொதுநிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துட கூடிய பணி அடையாள அட்டைகள்.
பாராளுமன்ற /சட்டமன்ற /சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாளஅட்டை, இந்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம்.
எனவே, வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் மேற்காணும் 12 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை வாக்குச்சாவடி மையத்திற்கு எடுத்துச்சென்று தங்களது வாக்கினை பதிவு செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / கலெக்டருமான கற்பகம் தெரிவித்துள்ளார்.