election-2016 பெரம்பலூர்: “எங்கள் வாக்குகளை விலைக்கு விற்கமாட்டோம்” – 1,500 க்கும் மேற்ப்பட்ட மாணவ-மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி தலைமையில் மாணவிகள் உறுதி மொழி ஏற்றனர்.

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே, குறிப்பாக புதிதாக வாக்களிக்க உள்ள இளந்தலைமுறை வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குரும்பலூர் பாராதிதாசன் பல்கலைகழக உறுப்புக் கல்லூரி மாணவிகள் சுமார் 1,500 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று குரும்பலூர் பாராதிதாசன் பல்கலைகழக உறுப்புக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் தங்களது வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை வலியுறுத்தும் விதமாக “VOTE NOT FOR SALE” என்ற வாசக வடிவில் நின்று சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நேர்மையுடனும், உண்மையயுடனும் வாக்களிப்பது தொடர்பான உறுதி மொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி தலைமையில் ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில், “வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை, வாக்காளா; என்பதில் பெருமிதம் கொள்வோம், வாக்களிக்கத்தயார் என்போம், எனது வாக்குரிமையை எக்காரனத்திற்காகவும், எந்தச்சூழலிலும் விலைக்கு விற்கமாட்டேன்,

நான் மட்டுமல்லாது எனது உற்றார், உறவினர்களையும் தவறாது வாக்களிக்கவும், நேர்மையுடன் வாக்களிக்கவும் வலியுறுத்துவேன், 18 வயது பூர்த்தியான அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க என்னால் ஆன பனிகளைச் செய்வேன், என்று உளமாற உறுதியளிக்கிறேன், வாக்களிப்போம்!

ஜனநாயகத்தை பேணிக்காப்போம்! என மாவட்ட வருவாய் அலுவலர் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க மாணவிகள் பின்தொடர்ந்து வாசித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் நடராஜன் மற்றும் சந்திரமௌலி, குமணன் உள்ளிட்ட் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!