Perambalur Weather: Recorded 108 degrees today; The wind blew hot until 5.30 pm! Chance of summer rain on Wednesday!
பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று அதிகபட்சமாக 108 °F டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. காலை 11 மணியில் இருந்து மாலை 5.30 மணி அனலாக காற்று வீசியது. இதனால், பைக், ஸ்கூட்டர் ஓட்டுபவர்கள் கடும் அவதிப்பட்டனர்.
சாலைகளில் சில இடங்களில் தார் உருகி கொழகொழவென காணப்பட்டது. பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் அமரப் போடப்பட்டிருந்த இரும்பு சேர்கள் சூடாகி காணப்பட்டது. வீடுகளில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரும் சூடாகி இருந்தது.
சிறு வயது குழந்தைகள் வெப்பத்தை தாங்க முடியாமலும், சொல்லத் தெரியாமலும் அழுதன.
நாளை வெப்பம் 109 °F டிகிரி பாரன்ஹீட்டாகவும், வரும் புதன் கிழமை பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் கோடை மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.