Perambalur weather: Widespread rain from midnight! People are happy!! Maximum 22 mm of rain was recorded in Thaluthalai area!
பெரம்பலூர் மாவட்டத்தின் பலப் பகுதிகளில் நள்ளிரவில் இருந்து பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் கோடையின் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயிலின் வெப்பத்தால் தவித்தவர்களுக்கு தற்போது பெய்த மழை பெரும் ஆனந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
பதிவான மழைளவு விவரம் (மி.மீ-ல்): பெரம்பலூர் 5, செட்டிக்குளம் 20, பாடாலூர் 4, அகரம்சீகூர் 2, லப்பைக்குடிக்காடு 0, புதுவேட்டக்குடி 10, எறையூர் 1, கிருஷ்ணாபுரம் 3, தழுதாழை 22, வ.களத்தூர் 5, வேப்பந்தட்டை 5 என மொத்தம் 77 மி.மி அளவு மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 7 மில்லி மீட்டராகும்.